News February 18, 2025
பாலியல் புகார் உதவி தலைமை ஆசிரியர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உதவி தலைமை ஆசிரியர் மீது பள்ளி மாணவிகள் 7 பேர் பாலியல் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரிமளம் அருகே உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் சைல்டுலைன் எண்ணைத் தொடர்பு கொண்டு பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பள்ளிக்கு சென்ற போலீசார், உதவி தலைமை ஆசிரியர் பெருமாளை கைது செய்து போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
Similar News
News July 6, 2025
புதுக்கோட்டையில் கொளுத்திய வெயில்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 102 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக 100 டிகிரியை தண்டி வெயில் தாக்கம் இருப்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் வெளியில் செல்பவர்கள் குடையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 5) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News July 5, 2025
புதுகை: சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி

புதுகை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.<