News February 18, 2025

பிரபலங்களுக்கு சொந்தமான சரக்கு பிராண்ட்கள்

image

மது தொழிலில் யுவராஜ் சிங் புதிதாக இணைந்துள்ளார். அவரது பிராண்டின் பெயர் FINO Tequila. ஷாருக்கானுக்குச் சொந்தமான பிராண்ட் D’YAVOL. சஞ்சய் தத் The Glenwalk பிராண்ட்டை சொந்தமாக்கியுள்ளார். அனிருத்தும், தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் இணைந்து Loca Loka பிராண்ட்டை வைத்துள்ளனர். ஹிந்தி படங்களில் நடித்துள்ள நேபாள் நடிகர் டேனி டென்சோங்பா, Yuksom Breweriesஐ வைத்துள்ளார்.

Similar News

News March 13, 2026

OBC கிரீமி லேயர் ஒதுக்கீட்டில் SC முக்கிய தீர்ப்பு

image

பிற்படுத்தப்பட்டோருக்கான(OBC) கிரீமி லேயர் நிலையை பெற்றோரின் வருமானத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது என்று SC தெளிவுபடுத்தியுள்ளது. இதுவரை, சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், பெற்றோரின் வருமானத்தை காரணம் காட்டி பணி நியமனம் மறுக்கப்பட்டு வந்தவர்களுக்கு இது நிம்மதியை அளித்துள்ளது. அவர்களின் நியமனங்களை மறுத்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்களை SC தள்ளுபடி செய்துள்ளது.

News March 13, 2026

OBC Creamy Layer & Non- Creamy Layer என்றால் என்ன?

image

OBC பிரிவினருக்கான மத்திய அரசின் இடஒதுக்கீட்டில் Creamy Layer/Non-Creamy Layer என 2 அடுக்குகள் உள்ளன. சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சியடைந்து ஆண்டு வருமானம் ₹8 Lak-க்கு மேல் உள்ளவர்கள் Creamy Layer-ல் வருவார்கள். அவர்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது. ஆண்டுக்கு ₹8 Lak-க்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் Non-Creamy Layer-ல் வருவார்கள். இவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

News March 13, 2026

கேஸ் சிலிண்டர்.. முற்றிலும் முடங்கப்போகுது

image

சிலிண்டர் தட்டுப்பாட்டால் சிறு, குறு தொழில்கள் 2 நாள்களுக்குள் முற்றிலும் முடங்கவுள்ளதாக MSME முன்னாள் தலைவர் ரகுநாதன் தெரிவித்துள்ளார். மூலப்பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும், தயார் நிலையில் உள்ள பொருள்களையும் ஏற்றுமதி செய்ய முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், மூலப்பொருள்கள் விலை உயர்வால் திருப்பூரில் சாய ஆலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!