News February 18, 2025
பழிவாங்கும் நடவடிக்கை: காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவை ஆர்எஸ்புரத்தில் பாஜக சார்பில் நடந்த புஷ்பாஞ்சலி கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்று பேசினார். இதுதொடர்பாக போலீஸார் அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். தொடர்ந்து இன்று அவர் ஆஜரான நிலையில் 1 மணி நேர விசாரணைக்கு பின் அனுப்பப்பட்டார். பின், பேசிய அவர் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறேன் என்றார்.
Similar News
News September 17, 2025
கோவை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News September 17, 2025
கோவையில் மோசடி: பொதுமக்கள் புகார் அளிக்கலாம்!

கோவையில் செயல்பட்டு வந்த சூர்யா ஈமு பார்ம்ஸ் எனும் நிறுவனம், சுமார் 210 முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார், ரூ.3 கோடியே 60, லட்சத்து 11 ஆயிரத்து 804 ரூபாயை பெற்று கொண்டு மோசடி செய்துள்ளதாக புகார்கள் வரபெற்றுள்ளது. இந்த நிறுவனத்தில் வேறு யாரேனும் பணம் செலுத்தி ஏமாந்து இருந்தால் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையை அனுகலாம் என, கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
News September 17, 2025
கோவை மக்களே: அரிய வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில், (செப்.23,24) ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேளாண் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. இதில் உழவர்கள், பட்டதாரிகள், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் பங்கேற்கலாம். மேலும் பதிவுக்கு business@tnau.ac.in, 8220661228 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க.