News February 18, 2025
கிரெடிட் கார்டு அப்ளை பண்றீங்களா… உஷாரா இருங்க!

சண்டிகரில் ஒருவர் கிரெடிட் கார்டுக்கு அப்ளை செய்ய, தான் வங்கி அதிகாரி என அழைப்பு வருகிறது. மோசடி கும்பல் என தெரியாமல், தனது மற்ற கிரெடிட் கார்டுகளின் தகவல்களை கொடுக்கிறார். லிங்க் ஒன்றை அனுப்பி, சுமார் ₹9 லட்சத்தை மோசடி கும்பல் சுருட்டி விட்டது. இப்போது ஏமாந்தவர் தவித்து நிற்கிறார். யாரும் இப்படி போன் செய்து பேசமாட்டார்கள் என வங்கிகள் எச்சரிக்கிறார்கள். உஷாராக இருங்க மக்களே!
Similar News
News March 9, 2026
₹30 லட்சம் கோடி காலி.. கலங்கும் முதலீட்டாளர்கள்!

வாரத்தின் முதலில் நாளிலேயே பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,271 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. இதனால் இன்றைய வர்த்தகத்தின் முடிவில், சுமார் ₹30 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டது. போர் பதற்றம், சர்வதேச சந்தைகளின் சரிவு உள்ளிட்டவை சரிவுக்கு காரணங்களாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக IndiGo பங்குகள் 8% அளவுக்கு சரிவை சந்தித்தது.
News March 9, 2026
ராஜ்யசபாவுக்கு 6 பேரும் போட்டியின்றி தேர்வு

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி அறிவித்துள்ளார். திமுகவில் இருந்து திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸில் கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிகவின் சுதீஷ் ஆகியோர் ராஜ்யசபா MP-க்களாக தேர்வாகியுள்ளனர். அதேபோல் அதிமுகவின் தம்பிதுரை, பாமகவின் அன்புமணி ஆகியோரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
News March 9, 2026
லோகோ போட்டி.. ₹50,000 பரிசு அறிவித்த மத்திய அரசு

VB-G RAM G திட்டத்துக்கு புதிய லோகோவை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு போட்டியை அறிவித்துள்ள கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த லோகோவுக்கு ₹50,000 பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் மொபைல் எண்/மின்னஞ்சல் ஐடியுடன் <


