News March 29, 2024
எம்எல்ஏ தேர்தலில் எவ்வளவு செலவு செய்யலாம் தெரியுமா?

பெரிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் ரூ.40 லட்சம் வரை அதிகாரப்பூர்வமாக செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி தந்துள்ளது. ஒரு தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டங்கள், விளம்பரம், பேரணி, வாகன செலவுகள் அந்த வேட்பாளரின் செலவு கணக்கில் வைக்கப்படும். இந்த கணக்கை தேர்தல் முடிந்த 30 நாள்களில் அளிக்க வேண்டும். கடந்த 2019ல் செலவு தொகை ரூ.28 லட்சம், 2022ல் ரூ.40 லட்சம் என உயர்த்தப்பட்டது.
Similar News
News November 5, 2025
10-வது படித்திருந்தாலே போதும், 405 பணியிடங்கள்

அணுசக்தித் துறையில் 405 Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு, 10,560 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. கல்வி தகுதி: 10th & ITI Pass செய்திருக்க வேண்டும். 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. தேவை இருப்பவர்கள் <
News November 5, 2025
கனமழை வெளுத்து வாங்கும்.. வந்தது அலர்ட்

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. 7 முதல் 11 செ.மீ. வரை கனமழை பெய்யக்கூடும் என்பதால், நவ.5,6,7,8 ஆகிய தேதிகளில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 7 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
News November 5, 2025
ஹரியானாவில் 22 ஓட்டுகள் போட்ட பிரேசில் மாடல்

ஹரியானா தேர்தலில் பிரேசிலை சேர்ந்த மாடல், ’சரஸ்வதி, ரஷ்மி, ஸ்வீட்டி’ என 22 பெயர்களில் வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது எப்படி நடந்தது என கேள்வி எழுப்பிய அவர், ஆபரேஷன் ஆட்சி திருட்டு என்ற பெயரில் காங்கிரஸின் பிரமாண்ட வெற்றியை தோல்வியாக பாஜக மாற்றியதாக சாடியுள்ளார். மேலும், ஹரியானா சட்டமன்ற தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.


