News March 29, 2024

அதிருப்தியில் பாதியிலேயே கிளம்பிய ராதிகா

image

விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் சில இடங்களில் மட்டுமே பேசிவிட்டு, பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். பாஜகவினரிடம் போதிய ஒத்துழைப்பு இல்லை. அதேபோல், சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் கூட்டமும் சேரவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அவர் பாதிலேயே கிளம்பிய நிலையில், சரத்குமார் மட்டும் பெருங்குடி பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

Similar News

News January 3, 2026

ஜனவரி 3: வரலாற்றில் இன்று

image

*1760–வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்
*1831–சமூக செயல்பாட்டாளர் சாவித்ரிபாய் புலே பிறந்தநாள்
*1957–முதலாவது மின்கடிகாரம் அறிமுகம்
*1966–இந்திய வீரர் சேத்தன் சர்மா பிறந்தநாள்
*1972–நாடகாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார் நினைவுநாள்
*1989–பாடகி சைந்தவி பிறந்தநாள்
*1993–நடிகை நிக்கி கல்ரானி பிறந்தநாள்
*2002–விஞ்ஞானி சதீஷ் தவான் நினைவுநாள்

News January 3, 2026

ரீ-ரிலீசிலும் ரஜினியின் ‘படையப்பா’ சாதனை

image

ரஜினியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘படையப்பா’ ரீ-ரிலீசானது. இந்நிலையில், ரீ-ரிலீசிலும் 25 நாள்கள் வெற்றிகரமாக ஓடி ‘படையப்பா’ மெகா பிளாக்பஸ்டர் ஆகியுள்ளதாக படக்குழு அறிவித்து, ரம்யா கிருஷ்ணன், ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் பூங்கொத்துடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளது. ₹20 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எத்தனை பேர் படையப்பாவை மீண்டும் பார்த்திங்க?

News January 3, 2026

திருமணத்திற்கு NO.. காதலனை கத்தியால் குத்திய காதலி

image

புத்தாண்டு கொண்டாட்டத்தில் காதலனின் பிறப்புறுப்பை காதலி கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் 42 வயது ஆணும், 25 பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தன்னை திருமணம் செய்யுமாறு பலமுறை வலியுறுத்தியும், காதலன் மறுத்ததாக விபரீத முடிவை காதலி எடுத்தாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளார். தலைமறைவான பெண்ணை போலீஸ் தேடுகிறது.

error: Content is protected !!