News February 18, 2025
பிப்ரவரி 22ல் நெகிழிக் கழிவுகள் சேகரிக்கும் பணி

மதுரை மாவட்டத்தில் மாதந்தோறும் 4ஆவது சனிக்கிழமையன்று ஒருங்கிணந்த முறையில் நெகிழிக் கழிவுகளைச் சேகரிக்கும் பணியை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் நெகிழிக் கழிவுகளை அகற்றி அப்புறப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது என மதுரை கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 14, 2025
JUST IN: மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் சிறையிலடைப்பு

மதுரை மாநகராட்சி ஊழல் வழக்கில் கைதான மேயர் கணவர் பொன்வசந்துக்கு சிகிச்சை முடிந்த நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையில் அவருக்கு ரத்த அழுத்தம் கூடியிருந்த நிலையில், மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆகஸ்ட் 26 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
News August 14, 2025
மதுரையில் நிலம் வாங்குறீங்களா? மக்களே உஷார்!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. மதுரை மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<
News August 14, 2025
மதுரை மாநகர் – தெரு நாய் கடித்து ஒருவர் படுகாயம்

மதுரை நேதாஜி சாலையில் தூத்துக்குடி சேர்ந்த இஸ்மாயில் தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் இஸ்மாயில் காலை கடித்தது, அவர் தப்பித்துவிட நினைத்தும் தொடர்ந்து விரட்டி கடித்ததால் ரத்தப்போக்கு அதிகமாகி அவர் மயங்கி விழுந்தார், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் தெரு நாய்களை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.