News February 18, 2025
பள்ளிகளுக்கு ₹2,000 கோடி கொடுக்கும் அதானி

நாடு முழுவதும் பள்ளிகளைக் கட்ட ₹2,000 கோடி வழங்கப்படும் என அதானி குழுமம் அறிவித்துள்ளது. இதற்காக GEMS எனும் சர்வதேச நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. 20 பள்ளிகள் கட்டப்படும் எனவும், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, தனது மகனின் திருமணத்தை முன்னிட்டு, ₹10,000 கோடியில் நலத்திட்டங்கள் மேற்கொள்ள உள்ளதாக அதானி அறிவித்திருந்தார்.
Similar News
News January 24, 2026
பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 17 நாள்களாக பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே <<18942504>>சிறப்பு மதிப்பெண்கள்<<>> மூலம் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என CM ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதனையடுத்து பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் CM ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர், போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அவர்கள் அறிவித்தனர்.
News January 24, 2026
3-வது பிரசவத்துக்கு சம்பளத்துடன் விடுமுறை

பெண் ஊழியர்களின் 3-வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோரி ஐகோர்ட்டில் பணியாற்றும் மங்கையர்கரசி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். இனி, இந்த உத்தரவை மேற்கோள்காட்டி, அரசு, தனியார் பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
News January 24, 2026
திமுகவில் ஸ்டாலினுக்கு வந்த புதிய சிக்கல்

தேர்தல் நெருங்குவதால் அமைச்சர்கள் பலரும் தங்கள் ஏரியாவில் பிரபலமானவர்களை திமுகவில் இணைத்து ஸ்டாலினின் குட் புக்கில் இடம்பெற்று வருகின்றனர். இது திமுகவுக்கு சாதகம் என்றாலும், ஒருபுறம் பாதகமாக மாறியுள்ளது. தென்காசி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கு, வரும் தேர்தலில் சீட்டு கொடுக்க தலைமை திட்டமிட்டுள்ளதால் பழைய நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனராம்.


