News February 18, 2025
புதுவையில் வேன் டிரைவர் போக்சோவில் கைது

அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் புதுச்சேரியைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் தினமும் வேனில் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் வேனில் சென்ற மாணவியை வேன் டிரைவர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக அந்த மாணவி பெற்றோர்களிடம் தெரிவித்ததை அடுத்து, மாணவியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வேன் டிரைவரை போக்சோ வழக்கில் நேற்று கைது செய்தனர்.
Similar News
News November 3, 2025
புதுவை: ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி, மண்ணாடிபட்டு மற்றும் திருபுவனை சட்டசபை தொகுதிகளின் ஓட்டுச்சாவடி முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் ராஜிவ்காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரியில் நடந்தது. வாக்காளர் பதிவு அதிகாரி குமரன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரியாகன ஆட்சியர் குலோத்துங்கன், ஓட்டுச்சாவடி முகவர்களின் கருத்துகளையும் மற்றும் ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்.
News November 3, 2025
புதுவை: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000 – ரூ.2,20,000
3 கல்வித் தகுதி: B.E., B.Tech., CA., CMA., MBA.,
4. வயது வரம்பு: 45 வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
News November 3, 2025
புதுவை: ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கைது!

மறைமலை அடிகள் சாலை அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, அங்கு சென்ற போலீசார், சந்தேகமான முறையில் நின்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் உழவர்கரை மடத்து வீதியைச் சேர்ந்த ஜெயன் சூசைராஜ், ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த சசிகாந்த மாலிக், கிருபசிந்து மாலிக் என்பதும், கஞ்சா வைத்திருந்தும் தெரிந்தது. அந்த 3 பேரையும் உருளையன்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.


