News March 29, 2024

ஹர்திக் பாண்டியா மனைவியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

image

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா மனைவி நடாசாவை சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்பட்டது முதல் அடுத்தடுத்து சர்ச்சை உருவாகி வருகிறது. நடந்து முடிந்த 2 போட்டிகளில் அந்த அணி தோல்வியடைந்ததால், ஹர்திக்கை ரசிகர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் விமர்சிக்கின்றனர். அவரின் மனைவியை சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Similar News

News March 15, 2026

தேர்தல் விதிமீறல்.. cVIGIL செயலியில் புகார் கொடுங்க!

image

சிவிஜில் (cVIGIL) என்பது தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகாரளிப்பதற்கு ECI உருவாக்கிய செயலி ஆகும். இதில் அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வது, பரிசுப் பொருள்கள் வழங்குவது, அனுமதித்த நேரத்தை மீறி பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் புகாரளிக்கலாம். எந்தவொரு விதிமீறலாக இருந்தாலும், அதுபற்றிய போட்டோ, வீடியோ, ஆடியோவை ஆதாரமாக பதிவேற்றி புகார் தெரிவிக்கலாம்.

News March 15, 2026

அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. தமிழக அரசு அறிவிப்பு

image

ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கைவிரல் ரேகையை மார்ச் 25-க்குள் பதிவு செய்ய வேண்டுமென மாவட்ட வாரியாக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால், இதுவரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள், அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று உடனே பணியை முடியுங்கள். இல்லையெனில், ரேஷன் அட்டையில் இருந்து பெயர்கள் நீக்கப்படலாம். ரேஷன் பொருள்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும். SHARE IT

News March 15, 2026

திரையில் ஹீரோ, நிஜத்தில் ஜீரோ: ஜவாஹிருல்லா

image

அதிமுக கூட்டணியில் தவெக இணையவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், விஜய்யை ஜவாஹிருல்லா மறைமுகமாக விமர்சித்துள்ளார். விஜய்யை திரையில் ஹீரோ, நிஜத்தில் ஜீரோ என்று சாடிய அவர், LPG விவகாரத்தில் விஜய் ஒரு அறிக்கையாவது வெளியிட்டு இருக்கிறாரா என கேள்வி எழுப்பினார். மேலும், அடிமைகளிடம் இவரும் அடிமையாகிவிட்டார் என்றும் எஜமானை (பாஜக தலைமை) பார்க்க டெல்லி சென்றுள்ளார் எனவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!