News March 29, 2024
கெஜ்ரிவால் கைது குறித்து ஐ.நா. சபை கருத்து

கெஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மன், அமெரிக்காவைத் தொடர்ந்து ஐ.நா.வும் கருத்து தெரிவித்துள்ளது. ஐ.நா. சபை பொது செயலாளர் குட்டெரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தேர்தல் நடத்தும் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும், அரசியல் கட்சியினர், மக்கள் உள்ளிட்ட அனைவரின் உரிமைகளையும் காக்கும் என நம்புகிறோம். நியாயமான, சுதந்திரமான சூழலில் தேர்தல் நடந்தால்தான் அனைவரும் வாக்களிக்க இயலும்” என்றார்.
Similar News
News July 9, 2025
எமோஜி அனுப்பினால் உறவுகள் மேம்படுகிறதா?

நவீன யுகத்தில் நேரடி உரையாடலை விட சமூக வலைதள சாட்டிங்தான் அதிகம். அந்தவகையில் ஒருவருடனான உரையாடலில் எமோஜிக்களை அடிக்கடி பயன்படுத்தும்போது உறவுகள் மேம்படுவதாகவும், நெருக்கம் வலுப்படுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. உணர்ச்சிகளின் சரியான வெளிப்பாடாக எமோஜி உள்ளதால் எதிர் நபரிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதாக டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் கண்டறிந்துள்ளார். உங்களுக்கு எமோஜி பிடிக்குமா? ?
News July 9, 2025
மாடுகளுடன் மாநாடு! பணிகளை ஆய்வு செய்த சீமான்

ஆடு, மாடுகளிடம் குறைகளை கேட்டறிந்து அரசிடம் சொல்லப்படும் என்பது போல் <<16951728>>ஒரு மாநாட்டை<<>> சீமான் நடத்த உள்ளார். மதுரை விராதனூர் பகுதியில் மாநாடு நாளை மாலை நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மாடுகள் இருக்கும் இடத்தில் சுற்றி இரும்பு வேலிகள் அமைத்து, அதற்கு முன்பாக ஒரு மேடை போடப்பட்டு அதில் சீமான் பேச உள்ளார். இந்நிலையில் மைக்கில் பேசி மாடுகள் மிரளுகின்றதா என சீமான் நேரில் ஆய்வு செய்தார்.
News July 9, 2025
சர்வதேச சந்தையில் சரியும் தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கம் விலை இன்று (ஜூலை 9) ஒரே நாளில் 42 டாலர்கள்(₹3,606) சரிந்து 3,254 டாலருக்கு விற்பனையாகிறது. உலக சந்தையில் தங்கம் விலை சரிவு, இந்தியப் பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் மாறாததே <<17001872>>தங்கம் விலை இன்று<<>> குறையக் காரணம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். உலக சந்தையில் இதே நிலை நீடித்தால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் சரியுமாம்.