News February 18, 2025
ஸ்பாவில் பாலியல் தொழில்: அடுத்தடுத்து கைது

புரசைவாக்கத்தில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஸ்பா மற்றும் சலூனில் பாலியல் தொழில் நடப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து, போலீசார் அயனாவரம் விஜயகுமார் (34) என்பவரை கைது செய்தனர். மேலும், 9 பெண்கள் மீட்கப்பட்டனர். இதேபோல் கடந்தவாரம் மயிலாப்பூரில் உள்ள ஸ்பாவில் 6 பெண்களை மீட்டனர். கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்பா & சலூனில் 9 பெண்களை போலீசார் பத்திரமாக மீட்டிருக்கிறார்கள்.
Similar News
News August 25, 2025
சென்னையில் 41,000க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் செயலிழப்பு

சென்னை மாநகராட்சி ஆய்வில் 41,000க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு பிராந்தியத்தில் (மண்டலம் 1–5) 10,937, மத்திய பிராந்தியத்தில் (6–10) 19,816, தெற்கு பிராந்தியத்தில் (11–15) 9,935 விளக்குகள் பழுதடைந்துள்ளன. குறிப்பாக கிண்டி, கோட்டூர்புரம், எக்காட்டுத்தாங்கல், மவுண்ட் ரோடு, பாரதிநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
News August 24, 2025
சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
News August 24, 2025
சென்னை: புலனாய்வு துறையில் வேலை; ரூ.81,000 வரை சம்பளம்

மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பிரெஷர்ஸ் கூட தாராளமாக விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள்<