News February 18, 2025
சோலுார் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு

ஊட்டி அருகே சோலுார் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப் பகுதியில் டாஸ்மாக் கடை செயல் பட்டபோது அப்பகுதி மக்கள் பல இடையூறுகளுக்கு ஆளாகினர். இதை தொடர்ந்து மக்கள் எதிர்ப்பால் கடை மூடப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் அங்கு டாஸ்மாக் திறக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதை எதிர்த்து நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மீறி மது கடை திறந்தால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
Similar News
News November 7, 2025
நீலகிரி: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க!

நீலகிரி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!
News November 7, 2025
நீலகிரி: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

நீலகிரி மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்)
மற்றவர்களும் பயனடைய இதை SHARE பண்ணுங்க!
News November 7, 2025
நீலகிரி: டிகிரி போதும்.. ரூ.1 லட்சம் சம்பளம்!

நீலகிரி மக்களே, மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் <


