News February 18, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: புறங்கூறாமை ▶குறள் எண்: 182 ▶குறள்: அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. ▶பொருள்: ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.

Similar News

News March 5, 2026

கார்களின் விலை சரசரவென குறைந்தது

image

கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? மார்ச் மாத சிறப்பு சலுகைகள் தொடங்கி உள்ளன. ஹோண்டா தனது கார்களுக்கு அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹57,000 முதல் அதிகபட்சமாக ₹1.97 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப் பக்கம் ஸ்வைப் செய்து தெரிந்து கொள்ளுங்கள். SHARE IT.

News March 5, 2026

OPS மீதான 4 வழக்குகள் ரத்தானது!

image

OPS-க்கு எதிரான நான்கு வழக்குகளை சென்னை HC ரத்து செய்துள்ளது. கடந்த மக்களவை உள்ளிட்ட தேர்தல்களில் தேர்தல் விதிமுறையை மீறியதாக OPS மீது பரமக்குடி, திருவாடானை, திருப்புல்லாணி, கீழக்கரை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வழக்கில் போதுமான ஆதாரங்களை போலீசார் சமர்ப்பிக்காததை அடுத்து OPS-க்கு எதிரான 4 வழக்குகளையும் ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News March 5, 2026

எல்லா புகழும் விஜயகாந்துக்கே: பிரேமலதா

image

ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக சார்பில் சுதீஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, நீண்ட நாள் கனவு நிறைவேறும்போது ஏற்படும் மகிழ்ச்சி தற்போது கிடைத்துள்ளது. எல்லா புகழும் விஜயகாந்துக்குதான் என உருக்கமாக கூறினார். அத்துடன் விஜயகாந்த் தான் தெய்வமாக இருந்து தங்களை வழிநடத்தி வருகிறார் என்றும், தேமுதிகவின் ஒவ்வொரு வெற்றியும் அவருக்கு தான் சேரும் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!