News February 18, 2025
மக்களிடமிருந்து குவிந்த 492 மனுக்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.17) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாற்றுதல், ஜாதி சான்று, இதர சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடம் இருந்து 492 மனுக்கள் பெறப்பட்டன.
Similar News
News August 15, 2025
தங்க பதக்கம் வென்ற திருச்சி மாவட்ட காவலருக்கு பாராட்டு

தமிழ்நாடு காவல்துறையினருக்கு மாநில அளவிலான திறனாய்வு போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான காவலர்கள் கலந்துகொண்டனர். அப்போது ‘Scientific aids in investigation’ பிரிவில் நடைபெற்ற போட்டியில், கல்லக்குடி காவல்நிலைய தனிப்பிரிவு காவலர் விஜயகுமார் தங்க பதக்கம் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு டி.ஜி.பி சங்கர் ஜிவால் பதக்கம்(ம)சான்றிதழை வழங்கினார்.
News August 15, 2025
திருச்சி: 81 அரசு காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ் நாடு கூட்டுறவு துறையின் கீழ் திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள ’81’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News August 15, 2025
திருச்சியில் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் ஆக.31-ம் தேதி, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில் திருச்சி மாவட்ட வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE NOW !!