News February 18, 2025

திருச்சி: பள்ளியை மூடக்கோரி வழக்கு – ரூ.1.50 லட்சம் அபராதம்

image

திருச்சியை சேர்ந்த அரவிந்த் என்பவர் திருச்சி மேல அம்பிகாபுரத்தில் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே இயங்கும் பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பள்ளியை மூட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழக்கை தொடர்ந்து உள்ளதால் மனுதாரருக்கு ரூபாய் 1.50 லட்சம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

Similar News

News March 7, 2026

திருச்சி: சோசலிஸ்ட் பார்ட்டி திமுகவிற்கு ஆதரவு

image

சோசலிஸ்ட் பார்ட்டி இந்தியா கட்சியின் தேசிய செயலாளர் தமிமுல் அன்சாரி, திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் – 2026, விரைவில் நடைபெற உள்ளது. இதில் சோசலிஸ்ட் பார்ட்டி இந்தியா கட்சியின் ஆதரவை திமுகவிற்கு அளிப்பது என முடிவு செய்துள்ளோம். திமுக தலைமையிலான கூட்டணி அமோக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்” என தெரிவித்தார்.

News March 7, 2026

மிகுந்த முக்கியதும் பெறும் திருச்சி!

image

திருச்சி மாவட்டத்திலிருந்து வரலாற்றிலே 4 பேர் நாடாளுமன்றம் செல்கின்றனர். முன்னதாக திருச்சி மக்களவை எம்பியாக துரை வைகோ உள்ள நிலையில், துவரங்குறிச்சியை சேர்ந்த கவிஞர் சல்மா மாநிலங்களவை எம்பியாக உள்ளார். இந்நிலையில், மேலும், திமுகவின் திருச்சி சிவா, காங்., சார்பில், கிறிஸ்டோபர் திலக்கும் மாநிலங்களவை உறுப்பினராக செல்ல உள்ளனர். இதனால், திருச்சி மாவட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறும் என பேசப்படுகிறது.

News March 7, 2026

திருச்சி: நாய்க்குட்டிகளை கொன்ற பெண் கைது

image

திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை பகுதியை சேர்ந்த மீனாட்சி மிஸ்ரா என்ற பெண், தெரு நாய் குட்டிகளை சுவரில் வீசி எறிந்து கொள்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து பீப்பிள் ஃபார் அனிமல் என்ற அமைப்பின் சார்பில், அந்த பெண்ணை கைது செய்ய கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஜீயபுரம் காவல்துறையினர் மீனாட்சி மிஸ்ராவை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!