News February 17, 2025
உங்க செல்போனில் உடனே இதை செக் பண்ணுங்க…

நாம் பயன்படுத்தும் மொபைல் போன் ரேடியோ அலை(RF) கதிர்வீச்சை வெளியிட்டுக் கொண்டே உள்ளது. இதை உடல் ஓரளவுக்கே தாங்கும். அளவுக்கு அதிகமான RF அலைகளை உடல்செல்கள் உட்கவர்ந்தால், கண்கள் மற்றும் விதைப்பைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதை SAR என்ற அளவீட்டில் அளக்கிறார்கள். செல்போன்களின் SAR அளவு 1.6 W/kg வரை மட்டுமே பாதுகாப்பானது என அரசு வரையறுத்துள்ளது. உங்கள் போனின் SAR என்ன என்பதை <<15478395>>இப்படி செக்<<>> பண்ணுங்க.
Similar News
News August 20, 2025
கில் வரவால் சாம்சனுக்கு பின்னடைவு?

சுப்மன் கில், ஜெய்ஸ்வால் இல்லாத போது மட்டுமே சாம்சனுக்கு ஓபனிங் இறங்க வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தேர்வுக்குழு தலைவர் அகார்கர் கூறியது சாம்சனுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 2025 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் கில் இடம்பெற்றிருப்பதால், சாம்சன் உட்கார வைக்கப்படவே வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. இதனால் அவரது டி20 கரியர் கேள்விக்குறியாகியுள்ளது.
News August 20, 2025
BREAKING: அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சி தகவல்

காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் CBI குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில், 103 சாட்சிகளின் வாக்குமூலங்கள், 102 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் அஜித்குமாருக்கு எதிராக திருட்டு புகார் வழக்கும் CBI வசம் உள்ள நிலையில், அதன் குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. திடுக்கிடும் திருப்பமாக, இந்த வழக்கில் நிகிதா மீதும் FIR பதிவு செய்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News August 20, 2025
பயந்து ஓடிய நேதாஜி..? பாடப்புத்தகத்தால் சர்ச்சை

ஆங்கிலேயர்களுக்கு பயந்து நேதாஜி ஜெர்மனிக்கு தப்பி ஓடியதாக, கேரள பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 4-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்த வரலாற்று பிழை இடம்பெற்றதாகவும், இதை அறிந்த உடன், பிழையை நீக்க உடனே உத்தரவிட்டுள்ளதாகவும் அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். உண்மையில், ஆங்கிலேயரை விரட்டவே ஜெர்மன் சென்று ஹிட்லர் உதவியை நேதாஜி நாடினார்.