News February 17, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21ஆம் தேதி அன்று காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

Similar News

News September 16, 2025

இராமேஸ்வரத்தில் இன்று முதல் துவக்கம்

image

இராமநாதபுரம்- இராமேஸ்வரம் வரை ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டு கடந்த செப்.13-ல் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் வெற்றி அடைந்ததை தொடந்து இன்று செப்.16 முதல் திருச்சி-இராமேஸ்வரம், கோயம்புத்தூர்-இராமேஸ்வரம், ஒகா-இராமேஸ்வரம் ஆகிய ரயில்கள் மின் இன்ஜினில் இயங்கும் எனவும் செப்.21 முதல் இராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் மின் இன்ஜினில் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 16, 2025

ராமநாதபுரத்தில் கட்டணமில்லா இலவச காவலர் பயிற்சி வகுப்பு

image

தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சமீபத்தில் 3665 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டது. இந்த பயிற்சிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக இலவச கட்டணமில்லா பயிற்சி வகுப்பு (செப்.16)தேதி இன்று துவங்கப்பட உள்ளது. இதில் சேர்வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 16, 2025

ராமநாதபுரம் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் அதிகாரிகள்

image

இன்று (செப்டம்பர்.15) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

error: Content is protected !!