News March 29, 2024
ரயிலில் வந்த சிறுவன் மீட்பு

சென்னை – எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் செங்கல்பட்டிலிருந்து 11 வயது சிறுவன் ஏறினார். டிக்கெட் பரிசோதனையில் சிறுவனிடம் நடத்திய விசாரணையில் பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வந்ததாக கூறியுள்ளான். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் திண்டுக்கல் ரயில்வே போலீசிடம் சிறுவனை ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் சிறுவனை ஒப்படைத்தனர்.
Similar News
News September 9, 2025
திண்டுக்கல்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

திண்டுக்கல் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 9, 2025
திண்டுக்கல்: தவெக விஜய் வருகிறார்!

தமிழக சட்டமன்ற தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வரும் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதில், வரும் டிச.20ஆம் தேதி திண்டுக்கல்லுக்கு வருகை தந்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.
News September 9, 2025
திண்டுக்கல்: வியாபாரியை ஏமாற்றிய மோசடிப் பெண்

திண்டுக்கல்: கோபால் சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மக்காச்சோளம் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் தான் ஏற்றுமதியாளர் என அறிமுகமான சேலத்தை சேர்ந்த சங்கீதா(38) பணத்தை தனக்கு அனுப்பி வைத்தால் விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் அனுப்புகிறேன் எனக்கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு மக்காச்சோளத்தை அனுப்பாமல் ஏமாற்றிய நிலையில், ராஜ்குமார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.