News February 17, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதம் தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடை பெறுவது வழக்கம். அதன் அடிப்படையிலே இன்று திங்கள்கிழமை முன்னிட்டு மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் கலந்து கொண்டு மனுக்களை பெற்றார்.

Similar News

News February 24, 2026

தி.மலை: வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இல்லையா?

image

தி.மலை வாக்காளர்களே, தமிழ்நாட்டில் நேற்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் மிஸ் ஆகியிருக்கா? நோ டென்ஷன்! வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், விடுபட்ட நபர்களின் பெயர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த லிங்கில் <>க்ளிக் <<>>செய்து, உங்கள் பெயரை சேர்க்கலாம். தகவலுக்கு 180042521950 அழைக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 24, 2026

தி.மலை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

பி.எம்.கிசான் நிதி உதவி பெறும் விவசாயிகள் நாளைக்குள்(பிப்.25) தனித்துவ அடையாள எண் பெற வேண்டும் என கலெக்டர் தர்ப்பகராஜ் தகவல் தெரிவித்துள்ளார். பதிவேற்றம் செய்யப்படாத பி.எம்.கிசான் நிதி உதவி பெறும் விவசாயிகள் இனி வரும் காலங்களில் பி.எம்.கிசான் 22-ஆவது தவணை நிதி உதவி பெற இயலாது. ஆகையால், விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

News February 24, 2026

தி.மலை: குழந்தைகளுக்கு ஆதார் முகாம்

image

அங்கன்வாடிகளில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக ஆதார் அடையாள அட்டை பதிவு செய்யும் முகாம் இன்று(பிப்24) தொடங்கி வருகிற பிப்.28ஆம் தேதி வரை நடக்கிறது என திருவண்ணாமலை அஞ்சலங்களின் கோட்டக் கண்காணிப்பாளர் முருகன் தெரிவித்துள்ளார்.எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!