News February 17, 2025

உணவு ஆர்டர் பண்றீங்களா? அப்ப இதை கவனிங்க

image

ஹோட்டல்களில் உணவு ஆர்டர் செய்யும்போது, பொதுவாக கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் உணவுகள் டெலிவரியாகின்றன. பலரும் வீடுகளில் இந்த டப்பாக்களை மீண்டும் பயன்படுத்துகின்றனர். இது <<15493487>>மிக ஆபத்தானது<<>> என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். இந்த பிளாஸ்டிக்கில் அடங்கியுள்ள BPA, phthalates உள்ளிட்ட நச்சு ரசாயனங்கள் இதய-ரத்த நாள நோய்கள், நீரிழிவு, மலட்டுத்தன்மை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து அதிகமாம்.

Similar News

News March 26, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹560 உயர்வு!

image

சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹13,670 ஆனது. 8 கிராம் கொண்ட சவரன் ₹560 உயர்ந்து ₹1,09,360-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை <<19478397>>1 அவுன்ஸ் 50 டாலர்கள்<<>> வரை குறைந்துள்ள போதிலும், நம்மூர் சந்தையில் விலை ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 26, 2026

கொமதேக போட்டியிடும் தொகுதிகள் எவை?

image

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி(கொமதேக) திருச்செங்கோடு மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி திருச்செங்கோட்டில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது. மீண்டும் திருச்செங்கோடு தொகுதியில் MLA ஈஸ்வரன் களமிறங்க உள்ளதாகவும், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. TNElection2026

News March 26, 2026

பாகிஸ்தான் ஒரு ‘தரகர் நாடு’: ஜெய்சங்கர்

image

ஈரான்-USA இடையே சமரசம் செய்யும் பாகிஸ்தானை ‘தரகர் நாடு’ என ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா 2 நாட்டிற்கிடையே நடக்கும் விஷயத்தில் தலையிடாது; USA தனது தேவைகளுக்கு PAK-ஐ பயன்படுத்துவது புதிதல்ல எனவும் கூறியுள்ளார். ஈரான் போரை நிறுத்தும் வாய்ப்பை இந்தியா நழுவவிட்டதாக காங்கிரஸ் உள்பட பலர் விமர்சித்து வந்த நிலையில் அதற்கு ஜெய்சங்கர் இப்படி பதிலளித்துள்ளார்.

error: Content is protected !!