News February 17, 2025
கருப்பு பிளாஸ்டிக் ஏற்படுத்தும் உடல்நலப் பாதிப்புகள்

உணவு டெலிவரிக்கு பயன்படும் கருப்பு பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்களால் இதய-ரத்த நாள நோய்கள், நீரிழிவு, மலட்டுத்தன்மை பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும், அதனால் ஹார்மோன் குறுக்கீடு, நரம்பு பாதிப்புகள், இதிலுள்ள மைக்ரோ பிளாஸ்டிக்கால் செல்களுக்கு சேதம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். ஆகவே, உணவுகளை வைக்க ஸ்டெய்ன்லென்ஸ் ஸ்டீல் போன்ற உலோகப் பாத்திரங்களே சிறந்தவையாம்.
Similar News
News March 10, 2026
‘சிலிண்டர் தட்டுப்பாடு’ PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம்

USA- ஈரான் போர் காரணமாக, இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் PM மோடிக்கு CM ஸ்டாலின் முக்கிய கடிதம் எழுதியுள்ளார். பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், குறு, சிறு தொழில்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், வணிக சிலிண்டர் உபயோகிக்கும் உணவகங்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்யவும், கூடுதல் மின்சாரத்தை வழங்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News March 10, 2026
எண்ணெய் நெருக்கடி.. சீனா ஏன் பயப்படவில்லை?

உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், ஈரானிடமிருந்து 90% எண்ணெய் வாங்கும் சீனா சிறிதும் கவலையின்றி இருக்கிறது. ஏனெனில், பெரிய அளவிலான தள்ளுபடியில் எண்ணெய் வாங்கும் சீனா, 140 கோடி பீப்பாய்களை அவசரகால இருப்பாக வைத்துள்ளது. சீனாவில் மின்சார வாகனங்கள் அதிகரிப்பால் எண்ணெயை சார்ந்திருப்பது குறைந்துள்ளது. மேலும், வளைகுடா நாடுகளின் விநியோகம் நின்றாலும் ரஷ்யாவிடமிருந்து வாங்க மாற்று வழியும் உள்ளது.
News March 10, 2026
விஜய்க்கு மீண்டும் CBI சம்மன்

கரூர் விவகாரம் தொடர்பான CBI விசாரணைக்கு டெல்லிக்கு பதில் சென்னையில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மார்ச் 15-ம் தேதி காலை டெல்லி தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக மீண்டும் CBI சம்மன் அனுப்பியுள்ளது. அன்றைய தேதியில் விஜய் ஆஜராவார் என நிர்மல் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.


