News March 29, 2024
வானூர் அருகே விபத்தில் வேன் ஓட்டுநர் பலி

வானூர், சின்னமுதலியார்சாவடியை சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் ஹரிதாஸ்(22). இவர் நேற்று முன்தினம் மொரட்டாண்டி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது குமாரி என்ற பெண் மீது பைக் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். பின்னர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் ஹரிதாஸ் உயிரிழந்தார். இது குறித்து ஆரோவில் போலீசார் நேற்று(மார்ச் 28) வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News October 28, 2025
விழுப்புரம்: சுகாதார ஆய்வாளர் எடுத்த விபரீத முடிவு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியார்சாவடி பாரதி நகரைச் சேர்ந்தவர் சரவணன் (38). விக்கிரவாண்டி பகுதியின் சுகாதார ஆய்வாளர் ஆவார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் ராஜலட்சுமி, சென்னைக்கு சென்ற நிலையில், சரவணன் தன் வீட்டில் மாலை 5:30 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News October 28, 2025
விழுப்புரம் ஆட்சியரின் அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம், விவசாயிகள் அக்டோபர் மாத குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 31.10.2025 அன்று காலை 11.00 மணியளவில் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிகளும், விவசாயிகளும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News October 28, 2025
விவசாயிகள் அக்டோபர் மாத குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், விவசாயிகள் அக்டோபர் மாத குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 31.10.2025 அன்று காலை 11.00 மணியளவில் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிகளும், விவசாயிகளும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


