News February 17, 2025

டெல்லி முதல்வரை தேர்வு செய்வதில் தொடரும் இழுபறி

image

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாள்கள் ஆன நிலையில், புதிய முதல்வர் தேர்வு செய்வதில் ஒருமித்த முடிவு எடுக்க முடியாமல் பாஜக தலைமை திணறி வருவதாக கூறப்படுகிறது. 48 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவின் முதல்வர் ரேஸில் பர்வேஷ் வர்மா, ரேகா குப்தா, சதீஷ் உபாத்யாய் மூவரும் உள்ளனர். மூவரும் எம்எல்ஏக்களை திரட்டுவதால் முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது.

Similar News

News October 29, 2025

மக்கள் நாயகன் காலமானார்.. அமைச்சர் இரங்கல்!

image

தென் மாவட்டங்களில் ‘மக்கள் நாயகன்’ என அழைக்கப்பட்ட <<18127223>>Dr.ராஜசேகர்<<>> மறைவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல் தெரிவித்துள்ளார். ஏழை மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட சேவைகள் நம் அனைவரது மனதிலும் என்றென்றும் நிலைத்து நிற்கும் எனவும் புகழாரம் சூட்டினார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ₹20 – ₹50 வரை மட்டுமே பீஸ் வாங்கி கொண்டு ஏழைகளுக்கு சிகிச்சை அளித்த Dr.ராஜசேகர் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News October 29, 2025

IND vs AUS: மழை குறுக்கிடுமா?

image

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான T20 போட்டி இன்று தொடங்குகிறது. ODI தொடரை 2- 1 என இழந்த இந்தியா, ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ள நிலையில், மழை அச்சுறுத்தல் உள்ளது. ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் நடைபெறும் போட்டியில், 25% வரை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

News October 29, 2025

அதிமுகவில் இணைந்தனர்.. செந்தில் பாலாஜி அதிர்ச்சி

image

கரூரில் EX அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, MR விஜயபாஸ்கர் இருவரும் மாறி மாறி மாற்றுக்கட்சியினரை தங்கள் வசம் இழுத்து வருகின்றனர். கடந்த 9-ம் தேதி கரூரை சேர்ந்த ADMK நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணைந்ததாக செந்தில் பாலாஜி தனது SM-ல் பதிவிட்டிருந்தார். உதவி செய்வதாக அழைத்து சென்று திமுக துண்டு போட்டு போட்டோ எடுத்ததாகவும், அவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்ததாகவும் ADMK தரப்பு புதிய போட்டோ வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!