News February 17, 2025
எஸ்பி தலைமையில் பாதுகாப்பு முன்னேற்பாடு கூட்டம்

தமிழக முதல்வர் அரசு விழா பாதுகாப்பு முன்னேற்பாடு கலந்தாய்வு கூட்டம் கடலூர் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐ.பி.எஸ், முதலமைச்சரின் பாதுகாப்பு காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கோடீஸ்வரன், நல்லதுரை மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள் இருந்தனர்.
Similar News
News December 18, 2025
கடலூர் அருகே நாயால் பறிபோன உயிர்

கடலூர், பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த வத்சலா (55) என்பவர் மகன் மதுபாலனுடன் முதுநகரிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது செம்மங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது குறுக்கே நாய் வந்ததால் மதுபாலன் பிரேக் பிடித்ததால் தவறி கீழே விழுந்ததில் வத்சலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து முதுநகர் போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
News December 18, 2025
கடலூர்: ரயில் மோதி தொழிலாளி பரிதாப பலி

திருச்சி மாவட்டம் லால்குடி நன்னிமங்கலத்தை சேர்ந்தவர் தொழிலாளி சங்கர் (47). இவர் நேற்று லால்குடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது கடலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரயில் மோதியதில் சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 18, 2025
கடலூர்: ரோந்து பணி காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.17) இரவு 10 மணி முதல் இன்று (டிச.18) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


