News February 17, 2025
திண்டுக்கல் எம்பி மத்திய பாஜக அரசு மீது குற்றச்சாட்டு

திண்டுக்கல், டெல்லி ரயில் நிலையத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் 18 பேர் பலியானதற்கு உள்துறை மற்றும் ரயில்வே துறை நிர்வாகங்களின் அலட்சியமே காரணம். இந்த இறப்புகளுக்கு ஒன்றிய பாஜக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பலியானவர்கள் பாதிக்கப்பட்டவர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News March 8, 2026
திண்டுக்கல்: ரூ.54,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 20 – 25 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19க்குள் <
News March 8, 2026
வடமதுரை அருகே விபத்து; ஒருவர் பலி!

வடமதுரை பகுதியை சேர்ந்த வசந்த் (21) நேற்று முன்தினம் நேரு (21) என்பவருடன் டூவீலரில் கொல்லப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற அடையாளம் தெரியாத முதியவர் மீது டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயம் அடைந்த அந்த முதியவர் உயிரிழந்தார். காயமடைந்த வசந்த், நேரு ஆகியோர் திண்டுக்கல் GH-ல் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்
News March 8, 2026
திண்டுக்கல்: இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டாஸ்!

கள்ளிமந்தயம் பகுதியில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்திய வழக்கில் மதுரை பேரையூர் சேர்ந்த நாகஅர்ஜுன் (26) கைது செய்யப்பட்டார். எரியோடு பகுதியில் நடந்த கொலை வழக்கில் வேடசந்தூர் பாகாநத்தத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (33) கைது செய்யப்பட்டார். இவர்களின் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட எஸ்பி பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சரவணன் உத்தரவின்படி இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


