News February 17, 2025

நியாய விலை கடை பணியாளர்களுக்கு ரொக்க பரிசு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். நிகழ்வில் அரசு அதிகாரிகள் பலர் உடன் பங்கேற்றனர்.

Similar News

News March 10, 2026

மயிலாடுதுறை: வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்

image

மயிலாடுதுறை சட்டமன்ற வேட்பாளராக நாதக சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திருவெண்காடு காசிராமன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முதல் கட்டமாக மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தில் வாக்கு கேட்டு, தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 10, 2026

மயிலாடுதுறை: ஊழியரிடம் லட்ச கணக்கில் பணம் அபேஸ்

image

மதுரை சேர்ந்த தனியார் பெயிண்ட் நிறுவன ஊழியர் ஆறுமுகம்(54). இவர் மயிலாடுதுறையில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு அனுப்பிய பெயிண்டுக்கான தொகையை வசுலிக்க வந்த நிலையில், மயிலாடுதுறையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த 1.90 லட்சம் வசூல் பணத்தை காணவில்லை. பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து cctv காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 10, 2026

மயிலாடுறையில் நாளை மின்நுகர்வோர் கூட்டம்!

image

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை(மார்.11) மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டமானது நாகை மின்பரிமான மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மின்நுகர்வோர் கலந்து கொண்டு, தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர்(பொறுப்பு) ரேணுகா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!