News February 17, 2025
தஞ்சை மாவட்டம் ஆட்சியர் 835 மனுக்களை பெற்றார்

தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 835 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் உரிய சம்பந்தப்பட்ட அவர்களிடம் வழங்கினார்கள்.
Similar News
News March 4, 2026
தஞ்சாவூர்: 2வது முறை திமுக ஆட்சிக்கு வரமுடியாது – விஜய்

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 4) தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பேசிய விஜய், “மோசடி ஆட்சியில் முக்கியமான ஆட்சி இது. இரண்டாவது முறை ஆட்சிக்கு வரலாம் என நினைக்காதீங்க. திமுக இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததே கிடையாது. விஜய்யை ஒழிக்கவே முடியாது.” என கூறியுள்ளார்.
News March 4, 2026
தஞ்சாவூர்: விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன் – விஜய்

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 4) தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பேசிய விஜய், “எனக்கு விவசாயத்தைப் பற்றித் தெரியாது. நானும் டெல்டாகாரன் என மற்றவர்கள் காதில் டால்டா ஊற்றமாட்டேன். ஆனால், அடுத்த ஜென்மத்தில் விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்.” என கூறியுள்ளார்.
News March 4, 2026
தஞ்சாவூர்: தமிழ்நாட்டின் ஒரே பிரதிநிதி தவெக – விஜய்

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 4) தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பேசிய விஜய், “தமிழ்நாட்டின் ஒரே பிரதிநிதியாக, உண்மையான பிரதிநிதியாக நாம் இருக்கிறோம். ஓம் சக்தி, பராசக்தி திமுக ஒரு தீய சக்தி என அனைவரும் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். இந்த அணி, அந்த அணி, டெல்லி அணி என எல்லா அணியையும் தவெக அடித்து நொறுக்கும்.” என கூறியுள்ளார்.


