News February 17, 2025
மாணவ, மாணவியர்கள் பரிசுத்தொகை வழங்கிய கலெக்டர்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று(பிப்.17) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட மைய நூலகத்தின் சார்பில் சிறுவாணி இலக்கியத் திருவிழா-2025 போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் சதீஸ் வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News March 8, 2026
தருமபுரி : மகளிருக்கு இந்த எண்கள் அவசியம்!

தருமபுரி மாவட்ட மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதேனும் பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 8, 2026
ஆரூரில் போட்டியிட விருப்ப மனு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்நிலையில் தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி நிர்வாகி கவிதா மோகன்தாஸ் அரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
News March 8, 2026
தருமபுரி: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.07), இரவு முதல் இன்று (மார்ச்.08) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.


