News February 17, 2025
இந்து சமயபேரவை தலைவர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை

குமரி மாவட்டத்தை பொறுத்தவரை சிவராத்திரி அன்று குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களுக்கும் சிவாலய ஓட்டம் நடைபெறுவது வழக்கம். சிவ தொண்டர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் நடைபயணமாகவும் 12 சிவாலயங்களையும் வணங்கி வருவது வழக்கம். எனவே அந்த இரண்டு தினங்களும் 12 சிவாலயங்களுக்கு செல்லும் வழிகளில் கனரக வாகனங்கள் அனுமதிக்க வேண்டாம் என்று இந்து சமயப் பேரவை தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்ி.
Similar News
News September 19, 2025
நாகர்கோவில்: மருமகளின் காதை கடித்த மாமியார்

நாகர்கோவில்: சாய்கோடு பகுதியைச் சேர்ந்த தமபதியினர் பிரின்ஸ் – மஞ்சு. மஞ்சு தனது கணவரின் குடிப்பழக்கைத்தை பற்றி பேசினால் மகனை தவறாக பேசாதே என்று மருமகளிடம் அல்போன்சா சண்டை போடுவாராம். நேற்று முன்தினம் மாலை பிரின்ஸ் மற்றும் மஞ்சு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மஞ்சுவுடன் அல்போன்சா தகராறில் ஈடுபட்டதோடு கல்லால் அவரது முகத்தில் அடித்து காதை கடித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு.
News September 18, 2025
கன்னியாகுமரியில் ரூ.1085 கோடியில் திட்டம் தயார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசன கால்வாயை சீரமைக்க ரூ.1085 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீர் பாசன துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் தோவாளை கால்வாய் ரு.189 கோடி, அனந்தனார் கால்வாய் ரூ.186 கோடி, நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய் ரூ.189 கோடி, பட்டணம் கால்வாய் ரூ.60 கோடி, திற்பரப்பு கால்வாய் ரூ.15 கோடியிலும் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
News September 18, 2025
குமரியில் காய்ச்சல் காரணமாக மாணவி உயிரிழப்பு

குமரி மாவட்டம் பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜினி தெரசா(22). இவர் திருவட்டார் பகுதியில் உள்ள ஹோமியோபதி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு வந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.