News February 17, 2025
காங். எம்.பி.யின் மனைவி ஐஎஸ்ஐ உளவாளியா?

ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கவுரவ் கோகாய், மனைவி எலிசபெத்தை அசாம் அரசு விசாரணை வளையத்தில் வைத்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த எலிசபெத் பாகிஸ்தானுடனும் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால், இருவரும் தேச துரோகத்தில் ஈடுபட்டார்களா? என்பதை கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.
Similar News
News March 4, 2026
தேர்தல் வாக்குறுதிகள்.. EPS முக்கிய அறிவிப்பு

அனைத்து குடும்பத்தினருக்கும் கருணைத் தொகை ₹10,000, மகளிருக்கு மாதந்தோறும் ₹2,000 உள்பட 3 கட்ட வாக்குறுதிகளை அதிமுக அளித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை வார்டு வரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று தொண்டர்களுக்கு EPS உத்தரவிட்டுள்ளார். இன்று நடைபெற்ற அதிமுக மா.செ., ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
News March 4, 2026
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. மகிழ்ச்சியான செய்தி

2021 தேர்தலின்போது 5 சவரன் தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. இது, சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு தள்ளுபடியும் செய்யப்பட்டது. இந்நிலையில், 2026 தேர்தலை முன்னிட்டு, நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி வெளியாகலாம் என மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அதேநேரம், இதை எதிர்பார்த்து கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் மக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
News March 4, 2026
நடிகர் ரஜினிகாந்த் வழக்கு.. பரபரப்பு உத்தரவு

சென்னை கோடம்பாக்கத்தில் தனக்கு சொந்தமான கட்டடத்தை ரஜினிகாந்த் குத்தகைக்கு விட்டிருந்தார். இந்த இடத்துக்கு வரி செலுத்தும்படி, ரஜினிக்கு சேவை வரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து சேவை வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் ரஜினி மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், விசாரணையின் முடிவில், சேவை வரித்துறை விதித்த வரியை ரத்து செய்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


