News February 17, 2025
வாக்காளர் பட்டியலில்: 33,000 பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், பிழைகள் திருத்தம் செய்யவும் கடந்த 3 மாதங்களாக பலர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். அதன்படி கோவை மாவட்டத்தில் புதிதாக பெயர் சேர்க்க 9,328 பேரும், நீக்கம் செய்ய 6,306 பேரும், பிழைகள் திருத்தம் செய்ய 18,244 பேர் என மொத்தம் 33,878 பேர் விண்ணப்பித்தனர் என மாவட்ட தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
Similar News
News December 20, 2025
பொள்ளாச்சிக்கு பெருமை சேர்த்த பெண்

சர்வதேச வாலிபால், ஆசிய வாலிபால் கூட்டமைப்பு சார்பில், உஸ்பெகிஸ்தானில் சர்வ தேச வாலிபால் நடுவர் தேர்வு நடந்தது. இந்தியா சார்பில் 3 பேர் உட் பட சர்வதேச அளவில் 22 பேர் பங்கேற்றனர். இதில் சிறப்பாக செயல் பட்ட தமிழகத்தின் பொள்ளாச்சியை சேர்ந்த பவித்ரா(30) நடுவரானார். தமிழகத்தின் முதல் பெண் சர்வதேச வாலிபால் போட்டியில் நடுவர் என பெருமை பெற்றார்.
News December 20, 2025
கோவை: SI தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

1) கோவை மாவட்டத்தில் நாளை (டிச.21) SI தேர்வு நடைபெறவுள்ளது.
2) தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
3) ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
4) 2 தேர்வு என்பதால் முதலில் காலை 8 மணிக்கு அறிக்கை நேரம். பின், பிற்பகல் 2 மணி அறிக்கை நேரமாகும்.
5) வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
(SI தேர்வுஎழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)
News December 20, 2025
கோவை: சொந்த வீடு வேண்டுமா?

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் உடனே விண்ணப்பிக்கலாம். இதற்கு சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். (வீடு கட்ட நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க)


