News February 17, 2025

BCCI விதியால் தவிக்கும் விராட் கோலி!

image

BCCI விதித்த கண்டிஷனால், கோலி சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு குடும்பம், தனிப்பட்ட ஊழியர்களை அழைத்து வரக்கூடாது என BCCI நிபந்தனை விதித்துள்ளது. இதனால், கோலி அவரின் சமையல்காரரை அழைத்துச் செல்லவில்லை. Diet விஷயத்தில் Strictஆக இருக்கும் அவர், தற்போது வேறு வழியில்லாமல், மேனேஜரை வைத்து ஓட்டலில் இருந்து பிரத்யேகமாக உணவை வரவழைத்து சாப்பிடுகிறாராம்.

Similar News

News October 28, 2025

வெந்நீர் குளியலின் நன்மைகள்

image

வெந்நீரில் குளிப்பது உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளை தருகிறது. மழைக்காலத்தில் பெரும்பாலும் அனைவரும், வெந்நீரில் குளிப்பது வழக்கம். அந்த வகையில், வெந்நீரில் குளிப்பதால், என்னென்ன நன்மைகள் நமக்கு ஏற்படும் என்று, மேலே பகிர்ந்துள்ள போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, உங்களுக்கு தெரிந்த நன்மைகளை கமெண்ட்ல சொல்லுங்க.

News October 28, 2025

பிக்பாஸில் களமிறங்குகிறாரா திருநங்கை ஜீவா?

image

பிக்பாஸ் தமிழ் சீசன் 9, மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, ஆதிரை ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்நிலையில், சிலர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், மீண்டும் ஒரு திருநங்கை போட்டியாளர் நுழையவுள்ளதாக கூறப்படுகிறது. ‘தர்மதுரை’ படத்தில் நடித்திருந்த திருநங்கை ஜீவா போட்டியாளராக களமிறங்குகிறாராம்.

News October 28, 2025

National Roundup: டெல்லி ஆசிட் வீச்சு வழக்கில் திருப்பம்

image

*நாளை மும்பைக்கு செல்கிறார் PM மோடி.
*மொன்தா புயல்: பாஜகவினர் களத்தில் பணியாற்ற JP நட்டா அறிவுறுத்தல்.
*டெல்லி ஆசிட் வீச்சு: பெண்ணின் தந்தை கைது.
*பஞ்சாப்பில் ஒரே நாளில் 147 தீ விபத்துகள் பதிவு.
*மொன்தா புயல் எதிரொலி: ஆந்திர பயணிகளுக்கு இண்டிகோ அலர்ட்.
*சத் பூஜையின் போது கங்கையில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழப்பு.

error: Content is protected !!