News February 17, 2025
காசி விசுவநாதர் கோவிலில் கொடிமரங்கள் பிரதிஷ்டை

இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 2 கொடிமரங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு கொடிமரம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக இன்று(17ஆம் தேதி) காலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
Similar News
News January 8, 2026
தென்காசி: EXAM இல்லை.. போஸ்ட் ஆபீசில் வேலை ரெடி!

தென்காசி மக்களே அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஜன.15க்கு பிறகு <
News January 8, 2026
தென்காசி: பூச்சி மருந்து குடித்து தற்கொலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜ் (45). இவர் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து இன்று உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News January 8, 2026
குற்றாலத்தில் வியாபாரி குத்தி கொலை

நெல்லை பகுதியை சோ்ந்தவர் வியாபாரி ராம்குமார் (48). இவர் திங்கள் இரவு வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் அவர் மனைவி போலீசில் புகார் அளித்தார். இதில் ராம்குமார் சென்ற காரின் பதிவெண் கொண்டு விசாரிக்கையில், நேற்று முன்தினம் குற்றாலம் விடுதியில் கத்தியால் குத்தப்பட்டு ராம்குமார் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதில் கவுதம் (22), மணிகண்டன் (30) மற்றும் 17 வயது சிறுவன் நேற்று கைது செய்யப்பட்டனர்.


