News February 17, 2025

பண்ருட்டி எம்எல்ஏ இன்று காலை அறிக்கை வெளியீடு

image

பண்ருட்டி எம்எல்ஏ மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலும், வளங்களையும் கொள்ளையடித்து பல இலட்சம் கோடிகளை வாரி சுருட்டிச் சென்று விட்டு, தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மனச்சான்று இல்லாமல் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News October 31, 2025

கடலூர்: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

image

கடலூர் மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம். வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <>parivahan.gov.in <<>>என்ற இணையத்தில் Drivers/Learners Licence-க்குள் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள் டூப்ளிகேட் லைசன்ஸ் வீடு தேடி வந்து விடும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 31, 2025

கடலூர்: ஹோட்டல் அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிறுதானிய உணவு உணவகம் அமைத்திட மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள மகளிர் சுய உதவி குழுவினர் வரும் நவ.10-ம் தேதி மாலை 5 மணிக்குள் கடலூர் மகளிர் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News October 31, 2025

கடலூர்: அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி

image

நெய்வேலி 17-வது வட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன் (36). இவர் என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.20 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடலூர் எஸ்.பி. ஜெயக்குமாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில், கடலூர் குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்கு பதிந்து ரூ.20 லட்சம் மோசடி செய்த மணிகண்டனை கைது செய்தனர்.

error: Content is protected !!