News February 17, 2025
தேசிய அளவிலான கணிதத் திறன் போட்டியில் 2ம் இடம்

பெரியகுளம் வட்டம் வடுகபட்டியில் ஸ்ரீ மார்க்கண்டேயா நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு பயிலும் மாணவன் நா.சித்தார்த் சென்னையில் நடைபெற்ற ப்ரைன்பாய் நடத்தும் 3வது தேசிய அளவிலான கணிதத் திறன் வளர்ப்புப் போட்டியில், 2ம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.இம்மாணவனுக்கு இன்று பள்ளி வளாகத்தில்,மாணவர்கள் முன்னிலையில் பள்ளி நிர்வாகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
Similar News
News March 5, 2026
தேனி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப EASY..

தேனியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது இந்த<
News March 5, 2026
தேனி: பைக் மீது ஆட்டோ மோதியதில் ஒருவர் பலி.!

தேனி கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்ராஜ் (26). இவர் நேற்று முன்தினம் அவரது நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார். கொடுவிலார்பட்டி சாலையில் பைக் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று இவர்களது பைக் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வேல்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு (மார்.4) பதிந்துள்ளனர்.
News March 5, 2026
தேனி: கீழே விழுந்து வக்கீல் உயிரிழப்பு.!

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (57). வழக்கறிஞரான இவரது மகளுக்கு கடந்த பிப்.22.ம் தேதி திருமணம் நடைபெற்றது. அன்று இரவு நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க வெளியே சென்றவர் மது போதையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் (மார்.3) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குமுளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.


