News February 17, 2025
திருப்பூருக்கு புதிய மாஸ்டர் பிளான்

திருப்பூர் மாநகராட்சி திருமுருகன், பூண்டி,பல்லடம் நகராட்சியில் சாமலாபுரம், அவிநாசி, ஊத்துக்குளி பேரூராட்சிகள் மற்றும் 54 கிராம ஊராட்சிகளுடன் 1031.66 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடன் உள்ளூர் திட்ட குழுமத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. நீடித்த நிலையான வளர்ச்சியுடன் ஜவுளி கண்டுபிடிப்புகளுடன் மையமாக திருப்பூர் செழித்து வளர்ந்து வரும் நிலையில் தற்போது புதிய மாஸ்டர் பிளான் உருவாகி வருகிறது.
Similar News
News April 21, 2025
திருப்பூர்: ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி!

திருப்பூர் ஊத்துக்குளி இடையே ரெயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மொரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சபரிநாதன் என்பது தெரியவந்தது.
News April 21, 2025
திருப்பூர் வட்டாட்சியர் அலுவலர்கள் எண்கள்

▶️திருப்பூர் (வ) வட்டாச்சியர் 0421-2200553. ▶️அவினாசி வட்டாச்சியர் 04296-273237. ▶️ பல்லடம் வட்டாச்சியர் 04255-253113.▶️தாராபுரம் வட்டாட்சியர் 04258-220399. ▶️ காங்கேயம் வட்டாட்சியர் 04257-230689. ▶️ உடுமலைபேட்டை வட்டாட்சியர் 04252-223857. ▶️ மடத்துக்குளம் வட்டாட்சியர் 04252-252588. ▶️ திருப்பூர் (தெ) வட்டாட்சியர் 0421-2250192.▶️ ஊத்துக்குளி வட்டாட்சியர் 04294-260360. மக்களே SHARE பண்ணுங்க.
News April 21, 2025
பொதுமக்களிடம் குறைகளைக் கேட்ட கலெக்டர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று கலெக்டர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அதன்படி இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்துகொண்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.