News February 17, 2025

அன்று குழந்தை நட்சத்திரம்.. இன்று ஜோடி!

image

மீனா குழந்தையாக நடித்து பின்னர், ரஜினிக்கு எப்படி ஜோடியாக நடித்தாரோ, அதே கதை மீண்டும் repeat ஆகியுள்ளது. கார்த்தி – கீர்த்தி ஷெட்டி ஜோடிக்கும் இது போன்ற கதை உள்ளது. கீர்த்தி ஷெட்டி நான் மகான் அல்ல படத்தில் குழந்தையாக நடித்துள்ளார். அன்று குழந்தையாக வந்தவர், தற்போது கார்த்திக்கு வா வாத்தியார் படத்தில் ஜோடி. என்ன இருந்தாலும், பார்க்க ஜோடியும், கேட்க பாட்டும் சூப்பராகவே இருக்கு. என்ன சொல்றீங்க!

Similar News

News March 5, 2026

மக்களுக்கு காவல்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை!

image

தெரியாதவர்களிடம் ஆன்லைனில் பழக வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது. காதல் வலையை வீசி உங்களை ஹனி ட்ராப்பில் சிக்க வைக்கலாம் என சுட்டிக்காட்டி, ஆன்லைனில் தெரியாதவர்களிடம் பர்சனல் போட்டோவை பகிர்வதையும், வீடியோ காலில் பேசுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது. மேலும், ஏமாற்றமடைந்தவர்கள் ‘1930’ என்ற அவசர எண்ணில் உதவி கோரவும் தெரிவித்துள்ளது. SHARE IT.

News March 5, 2026

அஜித் குமார் மரணம்.. திடுக்கிடும் புதிய தகவல்

image

அஜித் குமார் கொலை வழக்கில், நிகிதா முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். அஜித் குமாரிடம் போலீஸ் விசாரித்தது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நகை காணாமல் போனதாக புகாரளித்த பிறகு, மடப்புரத்தில் இருந்து தான் கிளம்பிவிட்டதாக கூறிய நிகிதா, தனது புகாரில் உண்மை இல்லை என CBI கூறவில்லை; ஆதாரம் இல்லை என்றுதான் தெரிவித்துள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

News March 5, 2026

EPS இதனால்தான் பதற்றத்தில் இருக்கிறார்: மாணிக்கம் தாகூர்

image

நிதிஷ்குமார் நிலைமை மூலம் NDA-ல் உள்ள கூட்டணிகளுக்கும் ஒரு செய்தி தெளிவாக சென்றிருக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். பிஹார் CM பதவியில் இருந்து <<19302375>>நிதிஷ்குமார்<<>> விலகியது பற்றி குறிப்பிட்ட அவர், பாஜக கூட்டணிகளில், கூட்டாளிகள் உண்மையான கூட்டாளிகள் அல்ல, அவர்கள் வெறும் பயணிகள் மட்டுமே என தெரிவித்துள்ளார். அதனால்தான், EPS போன்ற தலைவர்கள் சிறிது பதற்றமாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!