News February 17, 2025

வங்கியில் 1000 Vacancy.. மாதம் ₹85,000 வரை சம்பளம்

image

Central Bank of Indiaல் Credit Officer 1000 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. UG டிகிரி முடித்த, 20 – 30 வயதிற்குள் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கணினி வழி, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.02.2025. பதவிக்கேற்ப ₹48,480 முதல் ₹85,920 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. முழு விவரங்களுக்கு <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

Similar News

News March 25, 2026

₹3,500 ஆக உயர்வு.. புதிய தேர்தல் வாக்குறுதி

image

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லுக்கான ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ₹3,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அதிமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது. அதேபோல், கரும்பு உற்பத்திக்கு ஆகும் செலவைக் கருத்தில் கொண்டு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ₹4,500 ஆக நிர்ணயம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்கான ஆதார விலை தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ₹2,500 ஆக உள்ளது.

News March 25, 2026

ஈரான் – USA போர்.. முக்கிய பங்கு வகிக்கும் பாகிஸ்தான்

image

மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டு வரும் வாய்ப்பை இந்தியா நழுவவிட்ட நிலையில், அதற்கான முயற்சிகளில் பாகிஸ்தான் முன்னேறியுள்ளது. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த US துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழு 15 அம்ச திட்டத்துடன் விரைவில் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே இஸ்லாமாபாத்தில் வைத்து பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்யவுள்ளது.

News March 25, 2026

சிறு தொழில்களுக்கு ₹1 லட்சம் கடன்.. மத்திய அரசு திட்டம்!

image

தள்ளுவண்டி கடை வைத்திருப்பவர்கள், காய்கறி, பழ வியாபாரிகள் போன்றவர்களுக்கு உதவ பிரதம மந்திரியின் ஸ்வநிதி யோஜனா உள்ளது. <>pmsvanidhi.mohua.gov.in<<>> என்ற வெப்சைட்டில் அல்லது பொதுச் சேவை மையத்தை (CSC) அணுகி விண்ணப்பிக்கலாம். விற்பனைச் சான்றிதழ் (CoV) கட்டாயம். 3 தவணைகளாக ₹1 லட்சம் வரை கடன் கிடைக்கும். கடனை சரியாக செலுத்துபவர்களுக்கு 7% வரை வட்டி மானியம் கிடைக்கும்.

error: Content is protected !!