News March 29, 2024
நவாஸ் கனி தீவிர வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நவாஸ்கனி பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களை சந்தித்து ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் காரங்காடு கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கப்படும் என்றும் மின் பற்றாக்குறை சரி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.
Similar News
News March 18, 2026
ராமநாதபுரம்: இனி Whats App மூலம் ஆதார் கார்டு.!

ராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News March 18, 2026
ராமநாதபுரம்: ரூ.4.90 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் திருப்புல்லாணி சோதனைச்சாவடியில் நேற்று நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த கீழக்கரை முகம்மது சகில் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.4.90 லட்சம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
News March 17, 2026
இராமநாதபுரம்: பள்ளத்தில் கவிழ்ந்த கார்

கடம்பாகுடியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே தொண்டி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் தோட்டாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு தனது மனைவியுடன் காரில் தொண்டி நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. நிலைதடுமாறிய கார் சாலையோரப் பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த பாலு அவரது மனைவி இருவரும் நல்வாய்ப்பாக காயமுமின்றி தப்பினர்.


