News March 29, 2024

திமுகவுக்கு ஆதரவாக போஸ் வெங்கட், கருணாஸ் பரப்புரை

image

மக்களவைத் தேர்தலையொட்டி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்யும் நட்சத்திரங்களின் பட்டியலை திமுக சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதில் நடிகர்கள், போஸ் வெங்கட் , கருணாஸ், எழுத்தாளர் மதிமாறன், நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத், வாசுவிக்ரம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, கருணாஸ் தென் தமிழகத்தில் முக்குலத்தோர் சமூக வாக்குகளை கவரும் வகையில் பரப்புரை மேற்கொள்கிறார்.

Similar News

News February 17, 2026

ஜோதிமணிக்கு ஆதரவாக குரல்கொடுத்த திமுக

image

ஜோதிமணி குறித்து அருவருக்கத்தக்க வகையில் <<19163049>>பேசிய பாஜக நிர்வாகி<<>> மீது கடும் நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தியுள்ளார். பொதுவாழ்வில் உள்ள பெண்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற ஆபாச தாக்குதல்களை ஒழிக்காமல், அரசியலில் மட்டுமல்ல பொதுச்சமூகமாகக் கூட பெண்களின் உரிமையை நிலைநாட்ட முடியாது எனவும் கூறியுள்ளார். காங்.,-திமுக இடையே தொகுதி பங்கீட்டில் மோதல் நிலவும் நிலையில், கனிமொழியின் ஆதரவு கவனம் பெற்றுள்ளது.

News February 17, 2026

இடைக்கால பட்ஜெட்டில் இதெல்லாம் இருக்குமாம்!

image

இன்று தாக்கலாகும் தமிழக இடைக்கால பட்ஜெட்டில், தேர்தலையொட்டி கவர்ச்சிகரமான அறிவிப்புகள், இளைஞர்களுக்கான புதிய திட்டங்கள் இடம்பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மகளிர் உரிமைத் தொகை போன்று ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களின் நிதியில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாம். பட்ஜெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.

News February 17, 2026

பள்ளிகளுக்கு கோடை லீவு: அமைச்சர் புதிய தகவல்

image

தேர்தலையொட்டி பள்ளிகளுக்கு முன்னதாகவே கோடை விடுமுறை தொடங்க உள்ளதாக பேச்சு எழுந்தது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், ECI உடனான ஆலோசனைக்கு பிறகு 10, 12-ம் வகுப்புத் தேர்வு தேதி முடிவு செய்யப்பட்டது. அதில் மாற்றங்கள் இல்லை; ஏப்.6-ம் தேதி வரை பள்ளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் என உறுதி செய்துள்ளார். அந்த தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வை முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

error: Content is protected !!