News February 17, 2025
பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்

தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மங்களகரமான தினங்கள் எனக் கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடப்பது வழக்கம். அந்தவகையில், இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதில் 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2026
விஜய்க்கு மகன் கொடுத்த அதிர்ச்சி

இனிஷியலை மாற்றி விஜய்க்கு அவரது மகன் ஜேசன் சஞ்சய் அதிர்ச்சி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கீதா விவாகரத்து பிரச்னை புயலை கிளப்பிவரும் நிலையில், தான் இயக்கி வரும் ‘சிக்மா’ படம் குறித்த ஃபைல்ஸில் JASON SANJAY S என்றே அவர் குறிப்பிடுவதாக SM-ல் தகவல் பரவி வருகிறது. அம்மா சங்கீதாவின் பெயரையே இனிஷியலாக அவர் வைத்திருப்பதாக பேசப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவுமில்லை.
News March 13, 2026
பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் உயர்வு

பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை மேலும் ₹3,000 உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கெனவே ₹12,000 வழங்கிவரும் நிலையில், தற்போது 15,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகார அடையாள அட்டை உள்ளவர்களுக்கு விரிவான மருத்துவ காப்பீடு வழங்கப்படும் எனவும், வீட்டு வசதி வாரியத்தில் பத்திரிகையாளர்களுக்கு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
News March 13, 2026
ஜெ.வின் மறைவுக்கு பிறகு..

Ex CM ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களும், விலகியவர்களும் அரை டஜனுக்கு மேல் இயக்கங்கள், கட்சிகளை தொடங்கியுள்ளனர். பண்ருட்டி ராமசந்திரன், பெங்களூரு புகழேந்தியை தொடர்ந்து சசிகலாவும் தனி இயக்கம் கண்டுள்ளார். MGR-ஐ பின்பற்றி தொண்டர் ஒருவர் தொடங்கிய கட்சியில் (அஇபுதமமுக) இணைந்துள்ளார். அந்த இயக்கங்கள் & கட்சிகளின் விவரங்களை SWIPE செய்து பார்க்கவும்.


