News February 17, 2025

கீழ்பென்னாத்தூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

image

நெய்வாநத்தம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி இந்திரா (வயது 49). இந்திரா கடந்த ஒரு வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். கடந்த 14 தேதி மாட்டை கட்டி விட்டு வருகிறேன் என்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர்.பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று விவசாய நிலத்தின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 22, 2025

தி.மலையில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு<<>> கிளிக் செய்து இன்று (ஆகஸ்ட் 22) தி,மலை ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர்!

News August 22, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாகனங்கள் பொது ஏலம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது விநியோகப் பொருட்கள் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களும், வந்தவாசி உட்பட 9 வட்டாட்சியர்கள் பயன்படுத்திய பழைய ஜீப்புகளும் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. ஏலம் 9.9.2025 அன்று காலை 11 மணிக்கு திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என கலெக்டர் க.தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.

News August 22, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம்- ஆட்சியர் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகின்ற ஆக.29ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பாக ராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!