News February 17, 2025
விழுப்புரம்-தஞ்சாவூர் இரட்டை ரயில் பாதை: எம்.பி. கோரிக்கை

விழுப்புரம் -தஞ்சாவூர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். நாடாளுமன்ற, சட்டபேரவை உறுப்பினர்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொடர்ந்து, ரயில்வே துறை மூலம் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரட்டை ரயில் பாதை அமைப்பது குறித்து ரயில்வே அமைச்சரிடம் மயிலாடுதுறை எம்.பி. ஆர்.சுதா கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News January 12, 2026
விழுப்புரம்: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04151-294600 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 12, 2026
விழுப்புரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.
News January 12, 2026
விழுப்புரம்: திருஷ்டி கழித்த மனைவி – அடி வாங்கிய கணவன்!

விழுப்புரம்: அரசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி உமா. இந்நிலையில், உமா நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு திருஷ்டி கழித்து சுற்றி போட்டு எரித்துள்ளார். அப்போது ஏற்பட்ட புகை, பக்கத்துக்கு வீட்டிற்கு சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வீட்டின் உரிமையாளர் சந்திரசேகர், ராஜேந்திரனை கடுமையாக தாக்கினார். இதுகுறித்த புகாரில் சந்திரசேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


