News February 17, 2025

எடுத்த காரியத்தில் இருந்து பின்வாங்காதீர்கள்

image

செய்து முடிக்க வேண்டும் என முடிவெடுத்து தொடங்கிய காரியத்தை பாதியில் நிறுத்துவது, நாமே தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமம். செய்ய முடியும் என நினைத்தால், அதனை செய்வதற்கான வழியைத் தேடுங்கள். முயற்சியை நீங்கள் கைவிடும் போது தான், வெற்றி உங்களைக் கைவிடும். நம்பிக்கையுடன் போராடுங்கள். வெற்றி நிச்சயம்.

Similar News

News October 22, 2025

சற்றுமுன்: லெஜெண்ட் காலமானார்

image

நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானியான டாக்டர் ஏக்நாத் சிட்னிஸ் (100) வயது மூப்பால் காலமானார். வல்லரசுகளுக்கு சவால்விடும் இஸ்ரோவை உருவாக்குவதில் விக்ரம் சாராபாய்க்கு உறுதுணையாக இருந்த சிட்னிஸ், நாட்டின் முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான இன்சாட்-1 உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். இஸ்ரோவில் ‘ஏவுகணை நாயகன்’ அப்துல் கலாமுக்கு முதலில் வழிகாட்டியாக இருந்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

News October 22, 2025

BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும்…

image

கனமழை காரணமாக இன்று 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனிடையே, பருவமழையையொட்டி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பள்ளிகளுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பள்ளி வளாக கட்டடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்வது, பள்ளி வளாகத்தில் உள்ள தேவையற்ற செடி, கொடிகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் நாளை நடைபெறவுள்ளன. இதனை கண்காணிக்க அனைத்து HM-களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News October 22, 2025

கருணை அடிப்படையில் அரசு வேலை: இவர்களும் கோரலாம்!

image

நேரடி வாரிசுகள் தவிர கருணை அடிப்படையில் அரசு வேலைபெற இவர்களும் தகுதியானவர்கள்: *திருமணமான மகள், மருமகன் ஆகியோர் பெண்ணின் பெற்றோரை சார்ந்து வாழ்ந்து வந்தார்கள் என்பதை நிரூபித்தால் பணி நியமனம் உண்டு. *பணிக்கு செல்ல முடியாத நிலையில் திருமணமான மகள் இருந்தால், மருமகனுக்கு வேலை வழங்கப்படும். *திருமணமாகாத ஊழியர், விவாகரத்தானவர், கணவனை இழந்தவர் ஆகியோரின் பெற்றோர் (அ) சகோதர சகோதரிக்கும் பணி வழங்கப்படும்.

error: Content is protected !!