News February 17, 2025

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

image

அரக்கோணம் டவுன் போலீசார் வின்டர்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை கண்டு அங்கிருந்து தப்பியோட முயன்ற 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் (23) மற்றும் முத்துவைரம் (25) என்பதும் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 22, 2025

ராணிப்பேட்டை: காவல்துறையில் வேலை! APPLY NOW

image

ராணிப்பேட்டை இளைஞர்களே, தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து இன்று(ஆக.22) முதல் வரும் செ.21 வரை விண்ணப்பிக்கலாம். (SHARE)

News August 22, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28-ந் தேதி காலை 11 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்க உள்ளது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பிரச்சினைகளை களைந்திட கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுப்பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்தார்.

News August 22, 2025

ராணிப்பேட்டையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டை நகரில் இன்று (ஆகஸ்ட் 22) வட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8ஆம் வகுப்பு முதல் இளநிலை, பொறியியல் பட்டதாரி வரை கலந்து கொள்ளலாம். <>இந்த <<>>லிங்கில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 9488466468 எண்ணில் அழைக்கலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!