News February 17, 2025
“வெள்ளைக் குடை வேந்தர்” EPS விமர்சனம்

“வெள்ளைக் குடை வேந்தர்” என CM ஸ்டாலினுக்கு பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும் என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். வேலூர் கூட்டத்தில் பேசிய அவர், “திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது GoBackModi என கருப்பு பலூன் இருந்தது. ஆளும் கட்சியானதும் ஊழல் குற்றச்சாட்டுகளால், WelcomeModi என்று வெள்ளைக் குடை வந்துவிட்டது என்றார். மேலும், நீட் ரத்து ரகசியத்தை உதயநிதியால் இதுவரை கண்டறிய முடியவில்லை எனவும் சாடினார்.
Similar News
News March 22, 2026
புதுவையில் தனித்து போட்டியிடுகிறதா திமுக?

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், திமுக – காங்., கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது. நேற்று மாலை வரை காத்திருந்தும் திமுகவை <<19446097>>காங்.,<<>> பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இந்நிலையில், இதுதொடர்பாக இன்று CM ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் புதுவையில் தனித்து போட்டியிடலாமா என்றும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 22, 2026
பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் CPM

திமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு CPM தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் நடந்த CPM மாநில குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் தொடர்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தொகுதி எண்ணிக்கை விவகாரத்தில் விட்டுக் கொடுக்கப்போவதில்லை என்பதிலும் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், CPM-ஐ இதுவரை திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
News March 22, 2026
சரசரவென சரியும் வெள்ளி விலை!

கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹40,000 குறைந்துள்ளது. கடந்த 13-ம் தேதி சில்லறை விற்பனையில் கிராம் ₹290-க்கு விற்பனையான வெள்ளி, தற்போது ₹250 ஆக உள்ளது. அதேபோல், மொத்த விற்பனையில் 1 கிலோ ₹2,50,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 15% விலை சரிந்ததே, இந்த கடும் வீழ்ச்சிக்கு காரணமாகும். வரும் நாள்களிலும் தங்கம், வெள்ளி விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாம்.


