News February 17, 2025
சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளது: கருணாஸ்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளதாக கருணாஸ் கூறியுள்ளார். பாலியல் பிரச்னைகள் அதிகரிக்க செல்ஃபோன் பயன்பாடுதான் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், ஒரு இடத்தில் நடக்கும் சிறிய தவறுகள் சோஷியல் மீடியாவில் வைரலாகும்போது, அதே தவறு மீண்டும் நடப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும், திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் வரவேற்றுள்ளார்.
Similar News
News December 31, 2025
புத்தாண்டு முதலே சமத்துவம் பொங்கட்டும்: CM

தமிழக மக்களின் நம்பிக்கை மிகுந்த புத்தாண்டாக 2026 அமையும் என்று CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயக போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் ஆண்டாக இது இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். புத்தாண்டு தொடக்கம் முதலே சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 31, 2025
டீ குடிப்பதை நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?

டீ இல்லாத ஒருநாளை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? ஆனால், ஒரு மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்தினால் உடலில் பல நன்மைகள் நடப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். ➤ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும் ➤பதற்றம் குறையும் ➤டீஹைட்ரேஷன் பிரச்னைகள் குறையும் ➤செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்கள் குறையும் ➤செரிமான பிரச்சனை சரியாகும். இந்த சேலஞ்சுக்கு நீங்க ரெடியா? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
News December 31, 2025
பிரபல தமிழ் பாடகி காலமானார்

பருத்திவீரன் படத்தில் ‘ஊரோரம் புளியமரம்’ பாடல் பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் (75) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த இவர் பல கிராமிய பாடல்களை பாடி புகழ்பெற்றவர். இவர் மாட்டுத்தாவணி, தெனாவட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கிராமப்புற பாடல்கள் பாடி ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். அதில் கலைமாமணியும் ஒன்று.


