News February 17, 2025
அன்றே சொன்ன அண்ணா..!

மும்மொழிக் கொள்கையுடன் NEPஐ ஏற்றால் தான், TNக்கு நிதி என மத்திய அரசு கூறிய நிலையில், அண்ணாவின் பேச்சை பலரும் SM-இல் பகிர்கிறார்கள். ”சீனா படையெடுத்தபோது ஹிந்தியில் பேசியா நாம் ஒன்றுபட்டோம்? 3 மாதங்களில் ஹிந்தியை கற்றுக் கொள்ளலாம் தான். அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை. ஆனால், 30 ஆண்டுகளாக தமிழ் படித்தும் ஒருசில இடங்களில் பொருள் விளங்கவில்லை என அறிஞர்களே கூறுகிறார்கள்’’ என்பது அண்ணாவின் கருத்து.
Similar News
News January 13, 2026
கள்ளக்குறிச்சி: பெண்ணிற்கு போலீஸ் பாலியல் தொல்லை!

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 32 வயது பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். கடந்த ஓராண்டுக்கு முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முதல் நிலை காவலரான ஷேக் சலீமிற்கு இவர் அறிமுகமாகி பேசி வந்த நிலையில், அந்தப் பெண்ணிற்கு முதல் நிலைக் காவலர் ஷேக் சலீம் பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.
News January 13, 2026
BREAKING: அதிகாலையில் தமிழக மீனவர்கள் அதிரடி கைது

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் அதிகாலையில் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு கடல் பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 2 படகுகள், வலைகள், மீன்களையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 4-ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் கைது படலம் தொடர்வதாக தமிழ்நாடு மீனவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
News January 13, 2026
FLASH: ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம்

சர்வதேச சந்தையில் நேற்று போலவே இன்றும், தங்கம் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $83 உயர்ந்து $4,592 ஆக மாறியுள்ளது. இதனால், இன்றும் இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ₹1,760 உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை(₹1,04,960) எட்டியிருந்தது கவனிக்கத்தக்கது.


