News February 17, 2025
ஏன் தமிழ் ஆசிரியர்கள் இல்லை? திமுக எம்.பி. கேள்வி

மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்றால்தான் நிதி தருவோம் என மத்திய அரசு கூறும் நிலையில், இதுகுறித்து திமுக எம்.பி. அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். ஒவ்வொருவருக்கும் மும்மொழி தேவை என பாஜக சொல்கிறது. அப்படியென்றால், எத்தனை மாநிலங்களில் மூன்றாவது மொழியாக தமிழ் இருக்கிறது? அவ்வளவு ஏன்.. தமிழகத்தில் மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் கூட ஏன் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என அவர் கேள்வியெழுப்பினார்.
Similar News
News October 21, 2025
வக்கற்ற ஆட்சி நடத்தியவர் EPS: அமைச்சர் சக்கரபாணி

நெல்கொள்முதலை திமுக அரசு சரியாக செய்யவில்லை என<<18051682>> EPS குற்றம்சாட்டிய <<>>நிலையில் அமைச்சர் சக்கரபாணி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். உண்மைக்கு மாறாக அரசின் நெல் கொள்முதல் சாதனையை மறைக்கும் வகையில் EPS அவதூறு பரப்புவதாக அவர் சாடியுள்ளார். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நெல்லுக்கான மாநில அரசின் ஊக்கத் தொகையை ஒரு பைசா கூட உயர்த்த வக்கற்ற ஆட்சி நடத்தியவர் என்றும் விமர்சித்துள்ளார்.
News October 21, 2025
நிதிஷ் ரெட்டி 3 பார்மட் வீரர்: ரோஹித் சர்மா

இளம் ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி எல்லா பார்மட்களிலும் சிறந்த வீரராக வருவார் என ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI-ல் நிதிஷ் அறிமுகமான போது, அவருக்கு ரோஹித்தான் தொப்பியை கொடுத்து கவுரவித்தார். பின்னர், இந்திய அணியில் நீண்ட தூரம் பயணிக்கும் திறமை நிதிஷுக்கு உள்ளதாகவும், இந்திய அணி அவருக்கு எப்போது துணையாக இருக்கும் எனவும் கூறினார்.
News October 21, 2025
சமையலுக்கு எந்த எண்ணெய் பெஸ்ட் சாய்ஸ்?

▶மரச்செக்கு தேங்காய் எண்ணெய்யில் சமைக்கப்படும் உணவு விரைவாக கெட்டுப்போகாது. இதில் நல்ல கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. ▶வேர்க்கடலை எண்ணெய் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலுக்கு நன்மை செய்யும் பல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. ▶அவகேடோ எண்ணெய்யில் வறுத்த உணவுகள் சுவையாக இருக்கும். ▶பாமாயிலில் வைட்டமின் ஏ, நல்ல கொழுப்புகள் இருந்தாலும் இதை அதிகமாக பயன்படுத்தினால் கெட்ட கொழுப்பு அதிகமாகிவிடும்.